வைகாசி விசாக விழா கொடியேற்றம்
வைகாசி விசாக விழா கொடியேற்றம் நடந்தது.
சிவகங்கை
காளையார்கோவில்,
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ண காளீசுவரர் கோவிலில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமேசுவரர் சாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் நடந்தது. இதை யொட்டி சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனையுடன் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். வருகிற 11-ந் தேதி தேரோட்டமும், 12-ந் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்களும் சாமி திருவீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை காளையார்கோவில் கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகம் சிவஸ்ரீ காளீஸ்வர குருக்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story