அனைத்து கட்சி-அமைப்புகளின் கொடிகளை அகற்ற வேண்டும்


அனைத்து கட்சி-அமைப்புகளின் கொடிகளை அகற்ற வேண்டும்
x

முத்துப்பேட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி-அமைப்புகளின் கொடிகளை அகற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி-அமைப்புகளின் கொடிகளை அகற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரு கட்சிகள் இடைேய ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் நடந்தது.திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செல்லத்துரை, த.மு.மு.க. நிர்வாகிகள் வக்கீல் தீன்முகமது, நெய்னா முகமது, எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் பகுருதீன், காங்கிரஸ் நிர்வாகிகள் நெய்னா முகமது, அன்வர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகற்ற உத்தரவு

கூட்டத்தில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து தடை உத்தரவு அமலில் உள்ளதால் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் கொடி கம்பங்களை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் குணசீலன், கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத்தமன், சரண்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story