நாமக்கல்லில் தபால் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்


நாமக்கல்லில் தபால் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்
x

நாமக்கல்லில் தபால் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

நாமக்கல்

நாமக்கல்:

தேசியக்கொடி ஊர்வலம்

75-வது சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று இந்திய அஞ்சல் துறையின் சார்பாக நாமக்கல்லில் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம், மோகனூர் சாலை, பரமத்தி சாலை, சந்தைபேட்டை புதூர், உழவர்சந்தை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் முடிவடைந்தது.

விழிப்புணர்வு

ஊர்வலத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த ஊர்வலத்தில் தலைமையிடத்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, மேற்கு கோட்ட அஞ்சல் ஆய்வாளர் (பொறுப்பு) கோபிநாத், அஞ்சலக ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சங்கர், கோட்ட மற்றும் தலைமை அஞ்சலக ஊழியர்கள், மெயில் ஓவர்சீர்கள், தபால்காரர்கள், கிளை அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story