கல்லூரி மாணவிகளுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி


கல்லூரி மாணவிகளுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற அறிவுறுத்தலின்படி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மென்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற அறிவுறுத்தலின்படி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மென்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் தொழில் முனைவோர் யுக்திகள், நேர்முக தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, திறன்மிகு முடிவெடுத்தல், குழு நிர்வாகம், இலக்கு அமைத்தல், நேர நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மென்திறன் பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மூலம் மொத்தம் 25 வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் 875 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி சான்றிதழ்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியின் போது கல்லூரி மென் திறன் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியருமான ஆண்ட்ரூஸ் ஸ்காட் உடனிருந்தார்.


Next Story