சென்னை விமான நிலையத்தில் விமான சேவை சீரானது


சென்னை விமான நிலையத்தில் விமான சேவை சீரானது
x

வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த போது 2 மணி நேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் விமான சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் புறப்பாடு மற்றும் வருகை பல மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்துக்கு மாறி இருக்கிறது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது. கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு, விமான நிலைய மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story