கால்வாய் தூர்ந்து போனதால் சாலையின் குறுக்கே செல்லும் வெள்ளம்
செய்யாறு அருகே ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போனதால் சாலையின் குறுக்கே வெள்ளம் ெசல்கிறது.
செய்யாறு
செய்யாறு அருகே ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போனதால் சாலையின் குறுக்கே வெள்ளம் ெசல்கிறது.
ஏரி உபரிநீர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் மாண்டஸ் புயலில் தமிழகத்தில் அதிகபடியாக வெம்பாக்கம் தாலுகாவில் 25 செ.மீ. மழை பெய்தது. இதனால் செய்யாறு அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தின் பெரிய ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
ஏரியில் இருந்து வழிந்தோடும் உபரி நீரானது கால்வாய் வழியே மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு சென்றடையும். இந்த நிலையில் உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போனதால் உபரிநீர் கால்வாயின் கரைபுரண்டு விவசாய நிலங்களை மூழ்கடித்து செல்கின்றன.
சாலையின் குறுக்கே செல்லும் வெள்ளம்
மேலும் அந்த பகுதியின் வழியாக பாண்டியன்பாக்கம் - வெம்பாக்கம் சாலை செல்கிறது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கடந்த 2 நாட்களாக உபரிநீரின் வெள்ளப்பெருக்கு அதிகமாகி கால்வாயின் குறுக்கே சாலையில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தையும் தாண்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வெள்ளம் செல்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த வழியாக இயக்கப்பட்டு வந்த பஸ் 2 நாட்களாக இயக்கப்படாததால் 5-க்கும் மேற்பட்டகிராம மக்கள் பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
கால்வாய் தூர் வாரபடாததாலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தின் மீது மழை வெள்ளம் வழிந்தோடுவதாலும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் விவசாயமும், போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
உபரி நீர் கால்வாயினை தூர்வாரியும், கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கவும் வேண்டுமென பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.