குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிக்க தடை
x

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்றல் தழுவும் தென்காசியில் அமைந்திருக்கும் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story