கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடத்தூர்
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரி அணை
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று கோபி அருகே உள்ள கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு குளித்து மகிழ வருகிறார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அருவில்போல் கொட்டும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், அணை பகுதியில் விற்கப்படும் பொறித்த மீன்களை வாங்கி ருசிப்பார்கள்.
குளிக்க தடை
இந்தநிலையில் கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.