மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி சாலை, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.


Next Story