புளியஞ்சோலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு


புளியஞ்சோலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு
x

புளியஞ்சோலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உப்பிலியபுரம் பகுதியில் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

திருச்சி

புளியஞ்சோலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உப்பிலியபுரம் பகுதியில் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

புளியஞ்சோலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது புளியஞ்ேசாலை. மலைசார்ந்த பகுதியான இங்கு கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் புளியஞ்சோலையில் உள்ள அய்யாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இங்குள்ள நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார்.

தடை நீடிப்பு

இதனையடுத்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் துணை வன பாதுகாவலர் அல்லி ராஜ், வனச்சரக அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்தனர். இந்தநிலையில் தற்போது, தொடர் மழை பெய்து வருவதால் புளியஞ்சோலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

துறையூரில் 70 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லக்குடி 16.4, லால்குடி 17.4, புள்ளம்பாடி 88.4, தேவி மங்கலம் 4.4, சமயபுரம் 38.4, சிறுகுடி 4.8, வாத்தலை 13, மணப்பாறை 1, பொன்னணியாறு அணை 22.2, மருங்காபுரி 22.2, முசிறி 1, புலிவலம் 2, தா.பேட்டை 57, துவாக்குடி 47.3, கொப்பம்பட்டி 22, தென்பரநாடு 18, துறையூர் 70, பொன்மலை 12, திருச்சி ஏர்போர்ட் 30.3, திருச்சி ஜங்ஷன் 22, திருச்சி டவுன் 17 ஆகும்.

பயிர்கள் மூழ்கின

உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய, விடிய பெய்தது. இந்த மழையால் ஒக்கரையிலிருந்து கிருஷ்ணாபுரம் வரையிலான ஏரியையொட்டியுள்ள வயல் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

இந்த பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அதே போல் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டக்கல்லில் இருந்து தங்கநகர் செல்லும் மண்பாதை மழைநீரால்மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.


Related Tags :
Next Story