கொடுமுடி காவிாியில் வெள்ளப்பெருக்கு; ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு


கொடுமுடி காவிாியில் வெள்ளப்பெருக்கு;  ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு
x

கொடுமுடி காவிாியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு செய்தாா்.

ஈரோடு

கொடுமுடி

காவிரி ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொடுமுடி காவிரி கரையை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வந்தபோது இலுப்பை தோப்பு பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியை ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.

அவருடன் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி, துணைத் தலைவர் ராஜா கமால் ஹசன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

அப்போது காவிரிக்கு செல்லும் பாதைகள் அனைத்தையும் அடைக்கும்படி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். மேலும் கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியை சேர்ந்த மக்களுடன் ஸ்ரீசங்கர வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. தமிழக அரசால் கட்டப்பட்டு இச்சிபாளையம் ஊராட்சியில் அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இலுப்பை தோப்பு பகுதி மக்களை அங்கு மாற்றம் செய்வது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.


Next Story