முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு


முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

மூங்கில்துறைப்பட்டு முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் கல்வராயன்மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கல்வராயன்மலை அடிவாரப் பகுதிகளான லக்கிநாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, சங்கப்பனூர், ஆனைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ததையடுத்து முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஆறு, கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் வரத்து காணப்படுவதால் ஏரி, குளங்கள் படிப்படியாக நிரம்பி வருகின்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.


Next Story