நீப்பத்துறையில் வெள்ளப்பெருக்கு
நீப்பத்துறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
செங்கத்தை அடுத்துள்ள நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆற்றங்கரையில் உள்ள கோவிலில் வழிபடும் பக்தர்கள் ஆற்றுக்குள் உள்ள சென்னியம்மன் பாறைக்கும் சென்று வணங்குகின்றனர். இந்த நிலையில் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரிநீரால் சாத்தனூர் அணையும் நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீப்பத்துறையை ஒட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றிலும் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் ஆற்றின் நடுவே உள்ள சென்னியம்மன் பாறையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே ஆற்றில் இறங்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story