பாலாற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்


பாலாற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்
x

ஆம்பூர் பாலாற்றின் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

திருப்பத்தூர்

தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பச்சகுப்பம் பகுதியிலிருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.


Next Story