மகளிர் குழுக்களுக்கு ரூ.1½ கோடியில் மாவு அரைக்கும் எந்திரங்கள்


மகளிர் குழுக்களுக்கு ரூ.1½ கோடியில் மாவு அரைக்கும் எந்திரங்கள்
x

திருப்பத்தூரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1½ கோடியில் மாவு அரைக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் குடியரசு நகரில் இந்தியன் வங்கி சார்பில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் தொழில் திட்டத்தின் மூலம் 35 சதவீத மானியத்தில் 37 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுயமாக தொழில் தொடங்கிட ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அரிசி, கேழ்வரகு மாவு அரைக்கும் எந்திரம் வழங்கும்நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா வரவேற்றார் . மாவட்ட வள அலுவலர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் அரவிந்த், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலர் லதா கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவு அரைக்கும் எந்திரங்களை வழங்கி பேசினர்.

முடிவில் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story