பூக்கோலமிட்ட மாணவிகள்


பூக்கோலமிட்ட மாணவிகள்
x

செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ஓணம் விழாவில் மாணவிகள் பூக்கோலமிட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவிகள் ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமான மலர்களால் ஆன பூக்கோலம் போட்டு இருந்தனர். விழாவில் டாக்டர்கள் ராசிகா, ஆயிஷத்துல் நஷீதா ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இயல், இசை, நாடகம் போன்ற பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை இனிய தமிழ் சங்கம் மற்றும் கலை இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் நெடுமால் புகழேந்தி நன்றி கூறினார்.


Next Story