நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூ விலை உயர்வு


நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூ விலை உயர்வு
x
தினத்தந்தி 3 Aug 2023 1:15 AM IST (Updated: 3 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கையொட்டி,நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய பகுதிகளில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையக்கூடிய பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி, மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களை கொள்முதல் செய்வதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.850 முதல் ரூ.900 வரை விற்றது.

மற்ற பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:- முல்லை- ரூ.450, ஜாதிப்பூ- ரூ.400, சம்பங்கி - ரூ.200, கனகாம்பரம்- ரூ.350, பட்டன்ரோஜா- ரூ.200, ரோஜா-ரூ.220, செண்டுமல்லி- ரூ.100, கோழிக்கொண்டை-ரூ.100, மரிக்கொழுந்து- ரூ.120, துளசி-ரூ.50.


Next Story