ராமநாதபுரத்தில் பூக்கள் விலை உயர்வு


ராமநாதபுரத்தில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாதம் பிறந்து முகூர்த்த நாளாக உள்ளதால் ராமநாதபுரத்தில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

ராமநாதபுரம்

ஆவணி மாதம் பிறந்து முகூர்த்த நாளாக உள்ளதால் ராமநாதபுரத்தில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

பூக்களின் விலை உயர்வு

ஆடி மற்றும் ஆவணி மார்கழி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வழக்கமாகவே அனைத்து வகை பூக்களின் விலை உயர்வாகவே இருக்கும். இந்த மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருக்கும் என்பதால் பூக்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். தற்போது ஆவணி மாதம் பிறந்து முகூர்த்த நாளாக உள்ளதால் ராமநாதபுரம் பகுதிகளில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி அரண்மனை சாலை பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் ரூ.200-ல் இருந்து 400 வரை விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்திருந்தாலும் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் உயரும்

இதுகுறித்து பூ வியாபாரி அனந்தகுமார் கூறும்போது, கடந்த மாதம் வரையிலும் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.400 ஆக இருந்தது. தற்போது 800 ஆக உள்ளது. ரூ.250 ஆக இருந்த பிச்சிப்பூ 600 ஆக உள்ளது. 400 ஆக இருந்த கனகாம்பரம் தற்போது 800 ஆக உள்ளது. 200 ரூபாயிலிருந்த ரோஜா 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200-்ல் இருந்த செவ்வந்தி ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் 2 நாட்களில் ஓணம் பண்டிகை வருவதால் மதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு வரும் பூக்களின் வரத்தும் குறைந்துவிடும். மேலும் இந்த மாதம் முகூர்த்த நாள் அதிகம் வருவதால் பூக்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்றார்.


Next Story