சேவூர் பகுதியில் பூப்பறிக்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.

சேவூர் பகுதியில் பூப்பறிக்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.
x

சேவூர் பகுதியில் பூப்பறிக்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

சேவூர்

சேவூர் பகுதியில் பூப்பறிக்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.

காணும் பொங்கல்

சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தை பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி அவரவர் வீடுகளில் செய்த முறுக்கு, மிக்சர், இனிப்பு வகைகள் மற்றும் பொறி கடலை, கரும்பு ஆகிய தின்பண்டங்களை வீட்டில் இருந்து கூடைகளில் எடுத்துக் கொண்டு பகல் 2 மணியளவில் ஓரிடத்தில் ஒன்று கூடுவார்கள்.

பின்னர் அனைவரும் ஒருகிணைந்து தின்பண்டங்களை நடுவே வைத்து பாரம்பரிய கலையான கும்மி அடித்து பாட்டு பாடுவார்கள். அதை தொடர்ந்து அவரவர்கள் கொண்டு வந்த கார, இனிப்பு வகைகளை மற்றவர்களுக்கும் கொடுத்து ஒன்று கூடி ஆடிப்பாடி விளையாடி வருவார்கள். மாலை பொழுது சாயும் நேரம் ஆனதும் ஆவாரம் பூ பறித்து வந்து வாசல்லில் கொட்டி சாணத்தால் பிள்ளையார் பிடித்து பொங்கல் வைத்து தைப்பொங்கல் விழாவை நிறைவு செய்வார்கள். இதை சேவூர் பகுதியில் பூ பறிக்கும் திருவிழாவாக பண்டைகாலம் முதல் ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறார்கள்.

சாமி தரிசனம்

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு சேவூர், முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் தரை தப்பட்டை முழங்க புளியம்பட்டி சாலை, கோபி சாலை, சேவூர் போலீஸ் நிலைய வீதி, ராஜவீதி வழியாக பெண்கள் பாரம்பரிய கலையான கும்மியடித்து கிராமியபாட்டுபாடி சேவூர் வாலீஸ்வரர் கோவிலை வந்தடைத்தனர். பிறகு குளக்கரையோரமுள்ள பிள்ளையரை வழிபட்டு, கொண்டு வந்த முறுக்கு, கரும்பு, தேன்மிட்டாய், பொறி கடலை, இனிப்பு வகைகள் உள்பட அனைத்து தின்பண்டங்களை பிள்ளையார் முன் வைத்து கும்மியடித்து, அதன் பின் அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நவீன காலத்தில் பொங்கல் திருநாளில், பழமை மாறாமல் தங்களது வீடுகளில் செய்திருந்த தின்பண்டங்களுடன் அன்பையும் பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பல விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.மாலை 6 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த நிலையில் ஆவாரம் பூக்களை பறித்து கொண்டு, அவரவர் வீடுகளுக்கு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர்.

Next Story