பூக்கள் விற்பனை அமோகம்


பூக்கள் விற்பனை அமோகம்
x

பூக்கள் விற்பனை அமோகம்

திருப்பூர்

உடுமலை

உடுமலையில், ஆயுத பூஜைமற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பூக்கள் விற்பனை அமோகமாக உள்ளது. ஒரு கிலோ மல்லிைக பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விற்பனை

உடுமலை பெரியகடைவீதி மற்றும் சதாசிவம் வீதி ஆகிய இடங்களில் மொத்த பூ விற்பனை கடைகள் 2 உள்ளன. இந்த கடைகளுக்கு வெளியூரில் இருந்து தினசரி பூக்கள் கொண்டு வரப்படும். இங்கிருந்து சிறு வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். உடுமலையில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளுக்குக்கு தினசரி 2 டன் பூக்கள் வரும். இந்த நிலையில் ஆயுத பூஜைமற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கடந்த2நாட்களாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த பூ விற்பனை கடைகளுக்கு நேற்று 5டன் பூக்கள் வந்தது. பூக்களை வாங்கி செல்வதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அதன்படி ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கும், முல்லைப்பூ ரூ.800க்கும், செவ்வந்தி பூ ரூ.400-க்கும், அரளிப்பூ ரூ.500-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.100க்கும், சென்டுமல்லி பூ ரூ.80-க்கும், பட்டன் ரோஜாப்பூ ரூ.300-க்கும் விற்கப்பட்டது. இந்த கடைகளில் பூ மாலைகளும் விற்பனை செய்யப்பட்டன. மாலைகளை கட்டும் பணிகளில் பலர் ஈடுபட்டிருந்தனர். .

வாழைக்கன்றுகள்

உடுமலையில் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜேந்திரா சாலை,வெங்கடகிருஷ்ணா சாலை,கல்பனா சாலை, சதாசிவம் வீதி, பெரியகடைவீதி-பொள்ளாச்சி சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் வாழைக்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அவற்றின் அளவைப்பொறுத்து ஜோடிரூ.40முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. கலர் கோலப்பொடிகள் விற்பனையும் இருந்தது.



Next Story