காமாட்சியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
தொண்டியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம்
தொண்டி,
தொண்டியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் துண்டியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பொங்கல் வைபவமும், பெண்கள் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வ குல சமூகத்தார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story