மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

மதுரை

மதுரை,

மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. அதையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பு மின்அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு மேல் பூப்பல்லக்கில் மாரியம்மன் புறப்பாடாகி அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கோவிலை சென்றடைந்தார். அங்கு மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூடை, கூடையாக பூக்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.


Related Tags :
Next Story