பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் விழா நடைபெற்றது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், பால்குடம், பொங்கல் விழா, தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழாவையொட்டி இளையாத்தங்குடி, கீழசெவல்பட்டி, விராமதி, ஆவினிப்பட்டி, ஆத்தங்குடி, குருவிகொண்டான்பட்டி, இரணியூர், செவ்வூர், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும் பூ கூடை சுமந்தும் நடை பயணமாக வந்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கோவில் சுற்றுப்புறத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் நகர் வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு இரவு முழுவதும் அபிஷேகம் நடைபெற்றது. வருகிற 16-ந் தேதி பொங்கல் விழாவும், 17-ந் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.