பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பாண்டுகுடி சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிர வைசிய மகாசபை தலைவர் அரிவாசகன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் செல்வம், துணை தலைவர்கள் முத்துராமன், செல்லம், பாஸ்கரன், இணை செயலாளர்கள் ஜெகநாதன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.