பூக்கள் விற்கும் போராட்டம்
மாநகராட்சி அலுவலகம் முன்பு பூக்கள் விற்கும் போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்றுகாலை பூக்கள் விற்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் இணையத்தின் மாநில தலைவர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் தில்லைவனம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் பல ஆண்டுகளாக சாலையோரத்தில் சிறு வியாபாரமாக பூக்கள் விற்பனை செய்பவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் பூக்கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பூக்கள் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.