ரெயில் நிலையம் அருகில் மேம்பால பராமரிப்பு பணி தொடக்கம்
ரெயில் நிலையம் அருகில் மேம்பால பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு அருகில், பெல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தை உறுதிப்படுத்தும் பணி மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு அருகில் ரெயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது.
இதனால் வாகன போக்குவரத்தை மாற்றம் செய்து, அனைத்து வாகனங்களும் சீக்கராஜபுரம் பெல் புறவழிச்சாலை, பெல் பிரதான நுழைவு வாயில், மலைமேடு மற்றும் அக்ராவரம் வழியாக உள்ள மாற்றுப் பாதையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story