ரூ.130 கோடியில் மேம்பால பணிகள்
ரூ.130 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்று பேசினார்.
அதைத் தொடர்ந்து ஆம்பூர் நகரப் பகுதியில் ரூ.130 கோடியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் வாசுதேவன், மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story