போதிய வருமானம் இல்லாததால் கால்நடை வளர்ப்பை கைவிடும் விவசாயிகள்
போதிய வருமானம் இல்லாததால் கால்நடை வளர்ப்பை கைவிடும் விவசாயிகள்
பல்லடம்
பல்லடம், தீவனங்கள் விலைஉயர்வு போதிய வருமானம் இல்லாததால் கால்நடை வளர்ப்பதை கைவிடும் விவசாயிகள்.பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர்.இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை இது குறித்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் வருவாய் சற்று உதவிகரமாக இருந்தது.இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை போதுமானதாக இல்லை அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ, 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ, 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு, 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.