தானிய கிடங்குகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் ஆய்வு


தானிய கிடங்குகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் ஆய்வு
x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் தானிய கிடங்குகளை திடீரென தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

தனியார் தானிய கிடங்குகளில் பல்வேறு வகையான பருப்பு வகைகளை பதுக்கி வைத்து விலையற்றத்தை உருவாக்கும் முயற்சியில் தனியார் சிலர் ஈடுபடுவதாக தமிழக உணவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவு பொருள் பதுக்கலை தடுக்கும் நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் தானிய கிடங்குகளை திடீரென தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது உணவுப் பொருள் துணை ஆணையர் மதியழகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர், பொன்னேரி வட்ட வழங்க அலுவலர் ஜெயகர்பிரபு உணவு பொருள் கிடங்கு மேலாளர் பணியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'உணவுப் பொருட்கள், தானிய வகைகளை யாரும் பதுக்கி வைக்க கூடாது எனவும் மீறினால் கடுமை நடவடிக்கை எடுக்கப்படும் பருப்பு மூட்டை கடத்தல்களை தடுக்க கியூ ஆர் கோடு முறை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது' என தெரிவித்தார்.


Next Story