சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்


சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
x

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சந்திரசேகரன், மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணைத்தலைவர் குப்புசாமி உள்பட சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story