இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு திருவிழா


இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு திருவிழா
x

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு திருவிழா நடந்தது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் உணவு திருவிழா நடந்தது.

உணவு திருவிழா

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் பருவம் சார்ந்த மற்றும் வட்டார உணவுகளைக் கொண்டாடும் வகையில் உணவு திருவிழா நடைபெற்றது.

இதில் இயற்கை விவசாயிகள் சார்பில் இயற்கை உணவுப் பொருட்கள், பனை ஓலையை கொண்டு தயார் செய்யப்பட்ட பொருட்கள் கொண்ட 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட பூசணிக்காய், சுரைக்காய், கேரட், தக்காளி வகைகள், முளைக்கட்டிய சிறு தானிய வகைகள் என பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பனை ஓலை

இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

பனை ஓலைகளால் செய்யப்பட்ட சிவலிங்கம், பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய காதணி, வளையல்கள், ஒட்டியாணம், வீட்டு அழகு சாதன பொருட்கள் என பல்வேறு வகையில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஆபரண பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நாட்டு விதைகள், சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story