பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு


பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள விஸ்வநாதப் பேரியைச் சேர்ந்த அமெரிக்காவில் ப்ரைட் ஆப் இந்தியா விருது பெற்ற, பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான அ.ஆனந்தன் தனது 47வது- பிறந்த நாளை முன்னிட்டு அவரது சார்பில் வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 65 பேருக்கு காலை உணவும், மேலும் புளியங்குடியில் செயல்பட்டு வரும் அப்துல் கலாம் சமூக நல அமைப்புடன் இணைந்து ஆதரவற்ற பெரியவர்கள், 55 முதியோர்களுக்கு மதிய உணவும், அதே ஊரில் (புளியங்குடி) டி.எஸ்.எம் அறக்கட்டளை மூலம் பயிலும் 60 குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள தேவைப்படும் புதிய தட்டு, டம்ளர் மற்றும் லட்டு, சாக்லேட்டும் வழங்கப்பட்டது.

தென்காசி அருகே உள்ள இலஞ்சி ஜோதி சிறுபான்மையினர் நடுநிலைப் பள்ளியில் 70 குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மதிய உணவும், சங்கரன்கோவில் டி.டி.டி.ஏ மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் 48 குழந்தைகளுக்கு இரவு உணவும், சங்கரன்கோவில் வீரமாமுனிவர் விண்மீன் மக்கள் நல்வாழ்வு மையத்தில் உள்ள பெண் குழந்தைகள் 70 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தாளாளர் கு.தவமணி, தென்காசி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், சமூக ஆர்வலர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன், ராம்குமார், ராமவேல், சேகர், மாணிக்கம், வெங்கடேஷ், கணேசன், சுமன் விக்னேஷ், முத்துசெல்வம், முத்துகுமார், முத்துராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story