ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு


ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு
x

ஆறுமுகநேரி அருகே ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு ஆறுமுகநேரி ஸ்டேட் வங்கி அருகில் நகர காங்கிரஸ் கொடி கம்பத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பள்ளிவாசல் பஜாரில் முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சீனந்தோப்பு பகுதியில் உள்ள லைட் வெல்பர் டிரஸ்ட் சார்பில் நடைபெறும் முதியோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு அவர் உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் பாலசிங், ஆறுமுகநேரி நகர தலைவர் ராஜாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் விடுதலை செழியன் மற்றும் முதியோர் இல்ல தலைவர் பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நடேஷ்குமார், மாநகர் மாவட்ட தலைவர் திலகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையோர தொழிலாளர்களுக்கு நிழற்குடை வழங்கினார். மாநில காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், சலவை தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் அருள், சுப்பிரமணிய ஆதித்தன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் படுக்கப்பத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வர்கீஸ், தெற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அந்தோணி சுரேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story