நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு
x

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.

கரூர்

கரூா் மாவட்டம், கல்லடை, நெய்தலூர், பொய்யாமணி ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ெசயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையிலான போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் முறையாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் நடைபெறுகிறதா? முறைகேடு எதுவும் நடைபெறுகிறதா? என்று இந்த ஆய்வு செய்தனர். இதேபோல் அரசு அரவை மில்களிலும் இந்த ஆய்வு நடந்தது.


Next Story