உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்


உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
x

உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்


விருதுநகரில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மாநில தலைவர் அழகு சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மாரியப்பன், பொது செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும், உணவகங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். சாலை ஓர உணவகங்களில் உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story