உணவு பாதுகாப்பு உரிமம்இல்லாத 2 கடைகள் மூடல்


உணவு பாதுகாப்பு உரிமம்இல்லாத 2 கடைகள் மூடல்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகள் மூடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 2 கடைகளை மூடி உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உணவு பொருட்கள் பறிமுதல்

சாத்தான்குளத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சக்திமுருகன் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் 2 உணவகங்களில் பலகாரங்களை காகிதத்தில் வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சாத்தான்குளத்தில் ஒரு இனிப்பு கடையிலும், முதலூரில் உள்ள 2 இனிப்பகங்களிலும் தயாரிப்பு தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் இல்லாத 40 கிலோ பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

2 கடைகள் மூடல்

மேலும், சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கி வந்த மளிகைக் கடையையும், பழரசக் கடையையும் மூடி உத்திரவிடப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆய்வு செய்தபோது, கொப்பரை நிறுவனம் ஒன்று உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிவருவது கண்டறியப்பட்டது.

அந்நிறுவனத்தில், கொப்பரை கெட்டுப்போகாமல் இருக்க, அனுமதியற்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அந்நிறுவனத்தை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story