உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை


உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
x

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் வடக்கு, 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் திருப்பூர் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசிவம், உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், மருந்து ஆய்வாளர் மகாலட்சுமி, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது பல கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதேபோல் பல கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. ஒருசில கடைகளில் அனுமதி இல்லாமல் மாத்திரைகள் விற்பனை செய்ததும், விற்பனை செய்யும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பாளர்கள் பெயர், முகவரி இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், காலாவதியான பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் எச்சரித்தார்.


Next Story