தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு பட்டியல்படி உணவு தயார் செய்து வழங்க வேண்டும் -கூடுதல் முதன்மை செயலர் உத்தரவு


தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு பட்டியல்படி உணவு தயார் செய்து வழங்க வேண்டும் -கூடுதல் முதன்மை செயலர் உத்தரவு
x

திருப்பரங்குன்றம் தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு பட்டியல்படி உணவு தயார் செய்து வழங்க வேண்டும் என கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு பட்டியல்படி உணவு தயார் செய்து வழங்க வேண்டும் என கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டார்.

ரோட்டை அளந்தார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சோளங்குருணி சமத்துவபுரத்திற்கு நேற்று மாலை கூடுதல் முதன்மைச் செயலாளரும், மதுரை மாவட்ட கண்காணிப்பு குழு தலைவருமான சந்திரமோகன் வந்தார். பின்னர் அவர் சமத்துவபுரத்தில் சீரமைக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் அதே பகுதியில் போடப்பட்ட ரோட்டின் நீளம், அகலத்தை அளவீடு செய்தும், ரோட்டின் உறுதி தன்மையும் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்டையன், ஆணையாளர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை கூடுதல் தலைமை செயலர் ஆய்வு செய்தார்.

கண்டிப்பு

இதனையடுத்து திருநகர் மொட்டமலை பகுதியில் உள்ள மாணவர் தங்கும் விடுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்காக தயார் செய்த தோசையை சாப்பிட்டு பார்த்தார். மேலும் அவர் உணவு பட்டியல்படி இன்று பூரி தானே போடவேண்டும். பட்டியலில் உள்ளபடி உணவு வழங்காதது ஏன்? என்று கேட்டு கண்டித்தார். பட்டியல்படியே உணவு வழங்க வேண்டும். சாம்பார், சட்னி தரமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஆய்வின்போது, கலெக்டர் அனிஷ்சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன் உடனிருந்தனர்.


Next Story