சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். மாநில தலைவர் கலா கோரிக்கைகள் குறித்து பேசினார். மாநில பொது செயலாளர் மலர்விழி நிறைவுரையாற்றினார். சத்துணவு ஊழியர்கள் மீது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும், அவரது செயலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story