சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பாளையங்கோட்டை சார்பில், பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மீனா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் லட்சுமி, கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் செல்வபாக்கியம் நன்றி கூறினார்.
இதேபோல் அம்பை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாகி கனகா கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ரத்தினவேல், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் மகபூப் பாஷா, அம்பை அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ராஜகோபால், சலஜா அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.