தென்னிந்திய கால்பந்து போட்டி நிறைவு விழா


தென்னிந்திய கால்பந்து போட்டி நிறைவு விழா
x

தென்னிந்திய கால்பந்து போட்டி நிறைவு விழா நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகளில் 20 அணிகள் பங்கு பெற்றன. நிறைவு விழாவில் கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டினார். முதல் பரிசாக கேரளா ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி கோப்பையுடன் ரூ.25,000 பெற்றது. 2-ம் பரிசாக கோயம்புத்தூர் ரத்தினம் கல்லூரி அணி கோப்பையுடன் ரூ.15 ஆயிரம்,3-ம் பரிசாக கேரளா திருச்சூர் கல்லூரி அணி ரூ.10 ஆயிரம் பெற்றன. 4-வது இடத்தில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கோப்பையுடன் ரூ.5000 பெற்றது. கோயம்புத்தூர் ரத்தினம் கல்லூரி அணி வீரர் முகமது ஷானான் சிறந்த வீரராகவும், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் ஆல்வின் சிறந்த கோல் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா, இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கல்பந்தாட்ட குழு தலைவர் முகமது அலி, செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர்.



Next Story