காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி


காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி தொடங்கியது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக காயல் பிரீமியர் லீக் என்ற பெயரில் கால்பந்து போட்டிகளை காயல்பட்டினத்தில் நடத்தி வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் காயல்பட்டினத்தை சேர்ந்த பல்வேறு கிளப்புகளில் விளையாடும் வீரர்கள் குலுக்கல் முறையில் ஒரே அணியில் பங்கேற்று விளையாடுவார்கள். 15-வது வருடத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு காயல்பட்டினத்தை சேர்ந்த 110 வீரர்களும், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளை சேர்ந்த 40 வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி மைதானத்தில் முதல் போட்டியை கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.மொஹூதஜிம் தொடங்கி வைத்தார். முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டி வருகிற 18-ந் தேதி வரை தினமும் மாலையில் நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை வீ-யூனைடெட் நிறுவனர் அலி பைஸல், ஜஹாங்கிர், ஆசிரியர் மீரா தம்பி, பயிற்சியாளர் அபூபக்கர் மற்றும் ஜாபர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story