தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள்


தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள்
x

இளையான்குடியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் சனிக்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் சனிக்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கால்பந்து போட்டிகள்

இளையான்குடியில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி சனிக்கிழமை முதல் 3 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறும். போட்டியில் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டிகள் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழு மைதானத்திலும் நடைபெற உள்ளது. இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால் பொதுமக்களும் இந்த போட்டிகளை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரிசு கோப்பை

இவ்வாறு பெரிய அளவிலான போட்டிகள் இந்த பகுதியில் நடைபெறுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கால்பந்து விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு அதிகரிக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி போட்டியை பார்வையிட உள்ளார்.

நிறைவு விழாவில் கண்டரமாணிக்கம் ஊரை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன்விஜயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்குகிறார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற் கல்வித்துறை பேராசிரியர் செய்து வருகிறார்.



Next Story