கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா


கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
x

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் கல்வி மாவட்ட அளவில் எஸ். எஸ். டி. எம். கல்லூரி மைதானத்தில் காமராஜர் பிறந்த நாள் 16 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எடுஸ்டார் பள்ளி அணியும், காமநாயக் கன்பட்டி புனித அலோசியஸ் மேல் நிலைப் பள்ளி அணியும் மோதியது. இதில் கோவில்பட்டி எடுஸ்டார் பள்ளி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி அணியும், கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியது. இதில் காட்டுநாயக்கன் பட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கால்பந்து கழகச் செயலாளர் தேன்ராஜா தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஜெமிமா வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களை தொழிலதிபர் அர்னால்டு அரசு, பாண்டி ஆகியோர் வழங்கினா். உடற்கல்வி ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story