3 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 9-ந் தேதி தேர்தல்


3 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு   9-ந் தேதி தேர்தல்
x

நீலகிரியில் காலியாக உள்ள 3 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியம் தொட்டபெட்டா ஊராட்சி வார்டு எண் 1, குந்தா ஊராட்சி வார்டு 1, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி வார்டு 11 ஆகிய 3 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் வேட்பு மனுக்கள் பெறப்படும். வருகிற 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 30-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். வருகிற ஜூலை 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடை சி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 12-ந் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.


Next Story