ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கானதகவல் மையம் திறப்பு விழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தகவல் மையம் திறப்பு விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் மையம் திறப்புவிழா நடந்தது. கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தகவல் மையத்ைத திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் வாசகி, பேராசிரியர்கள் பாலு, சரண்யா, மோதிலால், தினேஷ், சிங்காரவேலு, ரூபன், செல்வன், பிருந்தா, ஜெயந்தி, திலீபன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரி இணையதளம் www.aditanarcollege.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலைப்பிரிவில் பி.ஏ. ஆங்கிலம், பொருளியல், பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல், பி.காம் வணிகவியல், பி.காம் வணிகவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.20-ந் தேதி காலை 9.45 மணிக்கும், அறிவியல் பாடப்பிரிவில் (பி.எஸ்.சி. கணிதவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி அறிவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.22-ந் தேதி காலை 9.45 மணிக்கும் கல்லூரி உள்அரங்கில் கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.