அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி


அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும்  ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்வதற்கான கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டார்.

ரத்த அழுத்தம்

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கான ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி நிறுவனம் (டேங்கர் அறக்கட்டளை) சார்பில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஜார்ஜி ஆபிரகாம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி இதயவியல் நிபுணர் நீலாம்புஜன், சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, போலீசாருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் நாமும், நமது குடும்பத்தாரும் சந்தோஷமாக வாழமுடியும். பணம், பதவியை விட மிகவும் முக்கியமானது உடல் ஆரோக்கியம். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், எண்ணங்கள் வலிமையானது, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, உங்களால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு நன்மைகளை செய்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்து, நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

தொடர்ந்து ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த கருவிகள் குறித்த செயல்முறை விளக்கங்களை டாக்டர்கள் அளித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, போலீஸ் கட்டுபாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளையை சேர்ந்த ராஜலட்சுமி ரவி, நாராயணசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


Next Story