தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் 5 லட்சம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் 5 லட்சம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்குவினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் 5 லட்சம் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) வகுப்புகள் தொடங்குகின்றன. தமிழக அரசு பள்ளிக்கூடம் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
பாடப்புத்தகங்கள்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 343 பாடப்புத்தகங்கள் வந்து உள்ளன. அதே போன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்காக மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 243 நோட்டு புத்தகங்கள் வரப்பெற்று உள்ளன.
இந்த பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.