சிறுவர், சிறுமிகளுக்கு மாநில அளவிலான கலைப்போட்டிகள் 5-ந்தேதி நடக்கிறது


சிறுவர், சிறுமிகளுக்கு  மாநில அளவிலான கலைப்போட்டிகள்  5-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுவர், சிறுமிகளுக்கு மாநில அளவிலான கலைப்போட்டிகள் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளதாக தேனி கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைத்துறையில் சிறந்து விளங்குகிற சிறுவர், சிறுமிகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகளை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சவகர் சிறுவர் மன்றம் சார்பாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குரலிசை, பதரநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் முத்துதேவன்பட்டி ஆர்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story