தேனியில் இருந்து மாட்டுத்தீவனத்துக்காக ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தல்


தேனியில் இருந்து மாட்டுத்தீவனத்துக்காக  ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தல்
x

தேனியில் இருந்து மாட்டுத்தீவனத்துக்காக ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்துபவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்

தேனி

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. இது மக்கள் பலருக்கு அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இலவச அரிசியை பெறும் பலர் அதை பயன்படுத்தாமல் விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற நபர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை கேரள மாநிலத்துக்கு கடத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

இதுகுறித்து கிடைக்கும் தகவல்களின் பேரில் பறக்கும் படையினரும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் நடவடிக்கை எடுத்து அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். சமீப காலமாக அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் மற்றும் உணவுப் பொருட்களுக்காக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ஆனால் அரிசி கடத்தலை தடுக்கும் போலீசார் மற்றும் பறக்கும் படையினர், அதே அரிசியை மாவாக அரைத்து கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அவற்றை பறிமுதல் செய்தால், அதன்பிறகு சந்திக்கும் நடைமுறை சிக்கல் காரணமாக நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது போன்று, ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்துவதை தடுக்கவும் அரசு துறைகள் ஒருங்கிணைந்த குழு அமைத்து தனிக்கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story